இலவசக் கருவிகள்
இலவச தனியுரிமைக் கொள்கை ஜெனரேட்டர்
உங்கள் இணையதளத்திற்கான தனியுரிமைக் கொள்கை வார்ப்புரு
பிரத்தியேகத் தனியுரிமைக் கொள்கை Shopify உடன் இணைந்தே வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பயனர்கள் இங்கே கிளிக் செய்து அதை மதிப்பாய்வு செய்து இன்றே தங்கள் இணையதளங்களில் சேர்க்கலாம்.
நீங்கள் Shopify-ஐப் பயன்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை. கீழே உள்ள எங்களின் இலவச தனியுரிமைக் கொள்கை ஜெனரேட்டர் உங்கள் வணிகத்தைத் தொடங்க உதவும். கீழே உள்ள புலங்களை நிரப்பினால், உங்கள் வணிகத்திற்கான பிரத்தியேக இணையதளத் தனியுரிமைக் கொள்கை வார்ப்புருவை மின்னஞ்சலில் அனுப்புவோம். அதில், உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட் மற்றும் வணிக நடைமுறைகளை நீங்கள் எப்படி அமைத்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து, நீங்கள் தனிப்பயனாக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் அடங்கியிருக்கும்.
உங்களின் தனியுரிமைக் கொள்கையுடன் சேர்த்து, Shopify-இன் இலவச சோதனையையும் பெறுங்கள்
எங்கள் தனியுரிமைக் கொள்கை வார்ப்புரு சட்ட ஆலோசனை அல்ல, இதைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள்
க்கு ஒப்புக்கொள்கிறீர்கள்.
பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
நன்மதிப்பை உருவாக்கி, வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்திற்கு ஏற்ற மதிப்பைப் பெறுகிறார்கள் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்துங்கள்.
சேவை விதிமுறைகள் கொள்கை
உங்கள் இணையதளத்தில் ஷாப்பிங் செய்யும்போது, பார்வையாளர்கள் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றித் தெரிவிக்கிறது.
FAQகள்
ஒரு வணிகம் வாடிக்கையாளரின் தரவை எப்படிச் சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, வெளிப்படுத்துகிறது மற்றும் நிர்வகிக்கிறது என்பதைத் தெரிவிக்கும் சட்டப்பூர்வ ஆவணம் தனியுரிமைக் கொள்கை ஆகும். உங்கள் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் எந்த வகையான தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன, அவை எப்படிப் பயன்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன, எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன, அதோடு ஒரு தனிநபர் தனது தகவல்கள் தொடர்பாக என்ன உரிமைகளைக் கொண்டிருக்கலாம் என்பதை இணையதளப் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதே இதன் நோக்கமாகும்.
கொள்கை ஜெனரேட்டர் என்பது வணிகங்களுக்கு Shopify வழங்கும் ஒரு இலவசக் கருவியாகும். அதாவது, இதைப் பயன்படுத்த எவ்வித கட்டணமும் இல்லை. நாங்கள் தற்போது பின்வரும் கொள்கை ஜெனரேட்டர்களை வழங்குகிறோம்:
- தனியுரிமைக் கொள்கை
- பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
- சேவை விதிமுறைகள் கொள்கை
உங்கள் இணையதளப் பார்வையாளர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை நீங்கள் சேகரித்தால், சட்டப்படி உங்கள் இணையதளத்தில் (மற்றும் உங்களிடம் மொபைல் செயலி இருந்தால் அதிலும்) தனியுரிமைக் கொள்கையை நீங்கள் வெளியிட வேண்டியது அவசியமாகும்.
சட்டரீதியான தேவைகளைத் தவிர்த்து, தெளிவான, புதுப்பிக்கப்பட்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஒரு தனியுரிமைக் கொள்கை, உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் இணையதளப் பார்வையாளர்களுக்கும் இடையே நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
Shopify-இன் இலவசத் தனியுரிமைக் கொள்கை ஜெனரேட்டர் கருவியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. தொடங்குவதற்கு:
- உங்கள் மின்னஞ்சல் மற்றும் நிறுவனத் தகவலை உள்ளிடுக
- உங்கள் இன்பாக்ஸுக்கு உங்கள் பிரத்தியேகத் தனியுரிமைக் கொள்கை வரும் வரை காத்திருங்கள்
- நீங்கள் தனிப்பட்ட தகவல்களை எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்கள் கொள்கையின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து தனிப்பயனாக்குங்கள்