இலவசக் கருவிகள்
இலவச ஷிப்பிங் லேபிள் டெம்ப்ளேட்
ஷிப்பிங் லேபிள் மேக்கர்
உங்கள் அனுப்புநர், பெறுநர் மற்றும் பேக்கேஜ் விவரங்களுடன் முறையான வடிவமைப்பைக் கொண்ட லேபிளை உருவாக்க இந்த இலவச டெம்ப்ளேட் உதவுகிறது.
இது கேரியர் ஷிப்பிங் லேபிள் அல்ல. இதில் அஞ்சல் கட்டணம், ஸ்கேன் செய்யக்கூடிய பார்கோடு அல்லது கேரியர் டிராக்கிங் ஆகியவை இடம்பெறாது—பேக்கேஜை உண்மையில் அனுப்ப, நீங்கள் இன்னும் உங்கள் கேரியரிடமிருந்தோ உங்கள் Shopify நிர்வாகியிலோ லேபிளை வாங்க வேண்டும். உங்கள் ஷிப்மென்ட் தகவலை ஒருங்கிணைக்க அல்லது பேக்கிங் குறிப்புக்காக இந்த டெம்ப்ளேட்டைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
FAQகள்
இல்லை. இது ஒரு டெம்ப்ளேட், முன்பணம் செலுத்தப்பட்ட ஷிப்பிங் லேபிள் அல்ல. இது பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும், இதில் உங்கள் “பெறுநர்” மற்றும் “அனுப்புநர்” தகவல்கள் இருக்கும்—ஆனால் முன்பணம் செலுத்தப்பட்ட அஞ்சல் கட்டணமோ கேரியர் பார்கோடோ இதில் இருக்காது. இதை நீங்கள் ஷிப்பிங் கேரியரின் மையத்திற்குக் கொண்டுசென்றால், அவர்கள் உங்கள் பேக்கேஜைப் பெறுவதற்கு முன்பு, நீங்கள் அதற்கான அஞ்சல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கேரியர்கள் ஏற்றுக்கொள்ளும் அதிகாரப்பூர்வமான ஷிப்பிங் லேபிளில், ஸ்கேன் செய்யக்கூடிய பார்கோடு, முன்பணம் செலுத்தப்பட்ட அஞ்சல் கட்டணம் மற்றும் தடமறிவதற்கான எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இது USPS, UPS, FedEx போன்ற கேரியராலோ Shopify Shipping போன்ற பிளாட்ஃபார்ம் மூலமாகவோ வழங்கப்படுகிறது.
தடமறிவதற்கான எண்ணை நீங்கள் உள்ளிடுவதற்கான ஒரு புலம் இந்த டெம்ப்ளேட்டில் உள்ளது, ஆனால் அது எந்தவொரு எண்ணையும் உருவாக்குவதில்லை. நீங்கள் அஞ்சல் கட்டணத்தைச் செலுத்தும்போது, தடமறிவதற்கான உண்மையான எண்கள் உங்கள் கேரியரால் வழங்கப்படும். அதுவரை அந்தப் புலம் காலியாகவே இருக்கும்.
- மேலே உள்ள படிவத்தில் அனுப்புநர், பெறுநர் மற்றும் பேக்கேஜ் விவரங்களை நிரப்பவும்.
- “லேபிள் டெம்ப்ளேட்டை உருவாக்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.
- Shopify-இடமிருந்து வரும் இணைப்புக்காக உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்.
- PDF-ஐப் பதிவிறக்கி அச்சிடவும்.
கிடைக்கும் முடிவு ஒரு முறையான டெம்ப்ளேட் ஆகும்—அது அதிகாரப்பூர்வ கேரியர் லேபிள் அல்ல. ஒரு பேக்கேஜை உண்மையில் அனுப்ப, நீங்கள் ஒரு கேரியரிடமிருந்தோ Shopify Shipping மூலமாகவோ அஞ்சல் கட்டணம் மற்றும் ஸ்கேன் செய்யக்கூடிய லேபிளை வாங்க வேண்டும்.
இந்த டெம்ப்ளேட் முற்றிலும் இலவசம். உங்கள் ஷிப்மென்ட் விவரங்களுடன் முறையான லேபிளை மட்டுமே இது உருவாக்கும், அஞ்சல் கட்டணம் இதில் சேராது என்பதை நினைவில் கொள்ளவும். ஷிப்பிங் செய்வதற்கு நீங்கள் உங்கள் கேரியருக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.