விற்பனைப் புள்ளி அம்சங்கள்

நீங்கள் எங்கு விற்றாலும் அதற்கேற்ற POS அம்சங்கள்

சில்லறை விற்பனைக் கவுண்டரில் உள்ள POS டேப்லெட் ஒன்றின் திரையில் Shopify POS இயங்குகிறது.

அம்சங்கள்

ஆம்னிசேனல் விற்பனை

ஸ்டோரிலும் ஆன்லைனிலும் மற்றும் சாத்தியமான அனைத்து இடங்களிலும் உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குங்கள்

ஸ்டோரில் பிக்அப் Pro

Shopify POS இலிருந்து நேரடியாக ஸ்டோரில் பிக்அப் செய்யும் ஆர்டர்களை நிர்வகித்து நிறைவேற்றலாம்.

ஸ்டோரில் வாங்கி ஷிப் செய்தல் Pro

ஸ்டோரில் விற்பனை செய்து, உங்களிடம் சரக்கு இருப்பு இருக்கும் எந்த இடத்திலிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஷிப் செய்யலாம். செக்அவுட்டின்போது வரிகளும் ஷிப்பிங் கட்டணங்களும் தானாகவே கணக்கிடப்படும்.

ஆன்லைனில் வாங்கி, ஸ்டோரில் பரிமாற்றம் மற்றும் ரிட்டர்ன் செய்தல் Pro

ஆன்லைனில் அல்லது வேறொரு இடத்தில் வாங்கப்பட்டவற்றுக்கான பரிமாற்றங்களை ஏற்பதன் மூலம் உங்கள் சரக்கு இருப்பு உடனடியாகப் புதுப்பிக்கப்படும்.

உள்ளூர் டெலிவரி Pro

ஆன்லைனில் பெறப்படும் உள்ளூர் டெலிவரி ஆர்டர்களை உங்கள் Shopify POS இலிருந்து நேரடியாக நிர்வகித்து நிறைவேற்றலாம்.

தயாரிப்பு QR குறியீடுகள்

வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தித் தயாரிப்புகள் குறித்து அறிந்துகொள்ளவும் ஆன்லைனில் வாங்கவும் வசதியாக அவற்றின் மீது QR குறியீடுகளை இணைக்கலாம்.

ஆன்லைனில் வாங்குவதற்காக கார்டை அனுப்புதல் Pro

வாடிக்கையாளர்களுக்கு ஆர்வமிருந்தும் ஸ்டோரில் அவர்கள் வாங்கத் தவறிய உருப்படிகள் அடங்கிய மின்னஞ்சலை அவர்களுக்கு அனுப்பலாம்.

ஸ்டோரிலிருந்து ஷிப் செய்தல் Pro

பணியாளர்கள் ஷிப்பிங் லேபிள்களை வாங்கி அச்சிடுவது உள்ளிட்ட, ஆர்டர்களைத் தேர்வுசெய்து, பேக் செய்து, ஷிப் செய்வதற்கு வசதியாக POS-இல் ஆர்டர்களை நிறைவேற்ற அவற்றை முன்னிலைப்படுத்தலாம்.

POS-இல் ஆர்டர்களை நிர்வகித்தல்

பணியாளர்கள் ஆர்டர்களைத் தடமறியவும், செயல்படுத்தவும், நிறைவேற்றவும் வசதியாக, POS-இல் ஆர்டர்களை ஒரே இடத்தில் பார்க்கலாம்.

சரக்கு மேலாண்மை

Shopify-இலிருந்து நேரடியாக ஸ்டாக்கைத் தடமறிதல், ஷிப்மென்ட்களைப் பெறுதல், உருப்படிகளை இடமாற்றுதல் மற்றும் உங்களின் அனைத்து இடங்களிலும் மாற்றங்களைச் செய்தல் போன்ற அனைத்தையும் மேற்கொள்ளலாம்

பல்வேறு இடங்களில் சரக்கு இருப்பைத் தடமறிதல்

POS, ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அனைத்து விற்பனைச் சேனல்களிலும் நிகழ்நேரத்தில் ஒத்திசையும் சரக்கு இருப்பை ஒவ்வொரு இடத்திலும் தடமறிந்து ஒதுக்கலாம்.

சரக்கு இருப்பைப் பெறுதல் Pro

Shopify POS-இல் பிற இடங்கள் அல்லது சப்ளையர்களிடமிருந்து வரும் ஷிப்மென்ட்களைக் கைமுறையாகவோ அல்லது பார்கோடு ஸ்கேனர் மூலமாகவோ ஏற்கலாம்.

சரக்கு இருப்பை அனுப்புதல் Pro

Shopify POS-இல் கைமுறையாகவோ பார்கோடு ஸ்கேனர் மூலமாகவோ பிற இடங்களுக்குச் செல்லும் ஷிப்மென்ட்களை நிறைவேற்றலாம்.

சரக்கு இருப்பு அளவுகளைச் சரிசெய்தல் Pro

Shopify POS-இல், உடனுக்குடன் ஸ்டாக் அளவுகளைப் புதுப்பிக்க, பார்கோடு ஸ்கேனர் மூலமான 'விரைவான கணக்கீட்டைப்' பயன்படுத்தலாம்.

பரிமாற்றங்கள்

Shopify POS உடன் ஒத்திசைக்கப்பட்ட, Shopify நிர்வாகியில் உள்ள இடங்களுக்கு இடையே சரக்கு இருப்புப் பரிமாற்றங்களை உருவாக்கி நிர்வகிக்கலாம்.

கொள்முதல் ஆர்டர்கள்

Shopify நிர்வாகியிலிருந்து சப்ளையர் கொள்முதல் ஆர்டர்களை உருவாக்கி, அனுப்பி மற்றும் தடமறியலாம்.

தேவை முன்கணிப்பு

விற்பனை வேகம் மற்றும் பருவகாலத்தின் அடிப்படையில் மறுஆர்டர் செய்வதற்கான பரிந்துரைகளைப் பெற, Shopify-இன் AI உதவியாளரான Sidekick-ஐப் பயன்படுத்தலாம்.

சரக்கு இருப்பை மறுசமன்படுத்துதல்

செயல்திறன் போக்குகளின் அடிப்படையில் இடங்களுக்கு இடையே ஸ்டாக் இடமாற்றங்களைப் பரிந்துரைக்குமாறு Sidekick-இடம் கேட்கலாம், மேலும் அதை உங்களுக்காகத் தானாகவே உருவாக்கும்படி செய்யலாம்.

குறைந்த ஸ்டாக் விழிப்பூட்டல்கள்

Shopify Flow மூலம் இயக்கப்படும் உங்கள் தற்போதைய விற்பனை விகிதத்தின் அடிப்படையிலான வரம்புகளைக் கொண்டு, இருப்புத் தீர்ந்துபோகும் முன் அறிவிப்பைப் பெறலாம்.

தனிப்பயன் சரக்கு இருப்பு அறிக்கைகள்

இடம் மற்றும் தயாரிப்பு அளவிலான அறிக்கைகளைப் பயன்படுத்திப் போக்குகளைக் கண்டறிந்து முன்கூட்டியே திட்டமிடலாம்.

பணியாளர் நிர்வாகம்

அனுமதிகளைக் கட்டுப்படுத்துவதையும் பணியாளர் செயல்திறனைக் கண்காணிப்பதையும் ஒரே இடத்திலிருந்து மேற்கொள்ளலாம்

மேலாளர் ஒப்புதல்கள் Pro

தள்ளுபடிகளைச் சேர்ப்பது அல்லது வரிகளைத் திருத்துவது போன்ற செயல்களுக்கு உங்கள் பணியாளர்களுக்கு எப்போது மேலாளர் ஒப்புதல் தேவை என்பதைக் குறிப்பிடலாம்.

வரம்பற்ற POS பணியாளர்கள் Pro

நிர்வாகி அணுகலைத் தனித்தனியாக வைத்துக்கொண்டு, பணியாளர்கள் POS-ஐப் பயன்படுத்த அனுமதிக்கலாம். நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் பணியாளர்களைச் சேர்க்கலாம்.

POS பணியாளர் பங்குகளும் அனுமதிகளும் Pro

ஸ்டோர் பணியாளர்களுக்குத் தனிப்பயன் பங்குகளை ஒதுக்கி, அவர்களுக்குச் சரியான அனுமதிகள் இருப்பதை உறுதிசெய்யலாம்.

விற்பனை கமிஷன்கள் Pro

கமிஷன்கள் அல்லது பாராட்டுகளை வழங்க விற்பனைகளைப் பணியாளர்கள் கணக்கில் சேர்க்கலாம்.

பணியாளர் POS PIN-கள்

பணியாளர்கள் POS-இல் உள்நுழைவதற்கு, பிரத்தியேகமான PIN-களை அவர்களுக்கு வழங்கலாம்.

செக்அவுட்

வாடிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையூறற்ற அனுபவத்தை வழங்கி ஒவ்வொரு விற்பனையையும் நிறைவுசெய்யலாம்

ரிட்டர்ன்கள் மற்றும் பரிமாற்றங்கள் Pro

ஆன்லைனிலோ அல்லது ஸ்டோரிலோ என எந்த இடத்திலிருந்தும் ரிட்டர்ன்கள் மற்றும் பரிமாற்றங்களை ஏற்று, உங்கள் சரக்கு இருப்பு தானாகவே புதுப்பிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

ஆர்டர்களை ரத்துசெய்தல் மற்றும் செல்லுபடியற்றதாக்குதல் Pro

வாடிக்கையாளர் தனது முடிவை மாற்றிக்கொண்டாலோ அல்லது செக்அவுட்டின்போது பிழை ஏற்பட்டாலோ எளிதாக ஆர்டர்களை ரத்துசெய்யலாம் மற்றும் பேமெண்ட்டுகளைச் செல்லுபடியற்றதாக்கலாம்.

கார்டைச் சேமித்து மீட்டெடுத்தல் Pro

செக்அவுட் செயல்முறையை விரைவாக வைத்திருக்க, ஷாப்பிங் கார்டுகளை எளிதாக நிர்வகிக்கலாம், சேமிக்கலாம் மற்றும் மீட்டெடுக்கலாம்.

தனிப்பயன் அச்சிடப்பட்ட ரசீதுகள்

உங்கள் பிராண்டுக்குப் பொருத்தமாக அச்சிடப்பட்ட ரசீதுகளை எளிதாகத் தனிப்பயனாக்கலாம்.

எங்கிருந்தும் செக்அவுட் செய்தல்

உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை வாடிக்கையாளரிடம் எடுத்துச் சென்று, நேரடியாக அங்கிருந்தே செக்அவுட் செய்யலாம்.

தனிப்பயனாக்கக்கூடிய ஸ்மார்ட் கிரிட்

பணியாளர்களுக்குக் குறிப்புகளை உருவாக்க, கார்ட் செயல்களின் அடிப்படையில் தகவமைத்துக்கொள்ளும் தனிப்பயனாக்கக்கூடிய ஸ்மார்ட் கிரிட் மூலம் செக்அவுட்டை விரைவுபடுத்தலாம்.

தள்ளுபடிக் குறியீடுகள்

உங்கள் ஆன்லைன் மற்றும் சில்லறை வணிகத்திற்கான தள்ளுபடி அல்லது விளம்பரக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

வரிகள்

உங்கள் ஸ்டோரின் அமைக்கப்பட்ட இருப்பிடத்தின் அடிப்படையில் வரிகள் தானாகவே கணக்கிடப்படும். வரிகளை முடக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது ஆர்டருக்கான தனிப்பயன் வரிகளை அமைக்கலாம்.

தனிப்பயன் மின்னஞ்சல் அல்லது SMS ரசீதுகள்

மீண்டும் தொடர்புகொள்ள, தனிப்பயன் மின்னஞ்சல் அல்லது SMS ரசீதுகளை அனுப்பி, உங்கள் வாடிக்கையாளர் தொடர்புப் பட்டியலை உருவாக்கலாம்.

பிரத்தியேகத் தள்ளுபடிகள்

முழு கார்டுகளுக்கும் அல்லது தனிப்பட்ட உருப்படிகளுக்கும் குறிப்பிட்ட தொகை அல்லது சதவீதத் தள்ளுபடிகளைப் பயன்படுத்தலாம்.

ஆர்டர் குறிப்புகள்

ஆர்டர்களுடன் குறிப்புகளை இணைப்பதன் மூலம், சிறப்பு கோரிக்கைகளையும் விவரங்களையும் தடமறியலாம்.

தனிப்பயன் விற்பனை

அப்போதே உருப்படிகளைத் தொகுத்து விலையை நிர்ணயிக்க, தனிப்பயன் வரிசை உருப்படிகளைப் பயன்படுத்தலாம்.

கேமரா பார்கோடு ஸ்கேனர்

உங்கள் iOS சாதனத்தில் உள்ள கேமராவைப் பயன்படுத்தித் தயாரிப்பின் பார்கோடு லேபிள்களை ஸ்கேன் செய்யலாம்.

ஆஃப்லைன் ரொக்கப் பரிவர்த்தனைகள்

நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போது பரிவர்த்தனைகளை நிறைவுசெய்ய ரொக்கப் பேமெண்ட்டுகளை ஏற்கலாம்.

ரிட்டர்ன்கள்

ஆன்லைன் அல்லது ஸ்டோரில் வாங்கியவற்றின் ரிட்டர்ன்களை ஏற்கலாம், மேலும் தயாரிப்பின் செயல்திறன் குறித்த நுண்ணறிவுகளைப் பெற அதற்கான காரணங்களைக் குறித்துக்கொள்ளலாம்.

தயாரிப்புகள்

உங்களின் அனைத்து விற்பனைச் சேனல்களிலும் நிகழ்நேரத் தயாரிப்புக் காட்சியமைப்பு மூலம் எப்போதும் தயார்நிலையில் இருக்கலாம்

வரம்பற்ற தயாரிப்புகள்

உங்கள் ஸ்டோரில் எண்ணற்ற தயாரிப்புகளைச் சேர்க்கலாம் மற்றும் மிகப்பெரிய தயாரிப்பு அட்டவணைகளை ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம்.

தயாரிப்புச் சேகரிப்புகள்

வகை, சீசன், விளம்பரங்கள் மற்றும் பலவற்றின்படி தயாரிப்புகளை வகைப்படுத்தலாம். விற்பனையாளர், விலை மற்றும் சரக்கு இருப்பு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிப்புகளைத் தானாகவே வரிசைப்படுத்த ஸ்மார்ட் சேகரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

தயாரிப்பு மாறுபாடுகள்

அளவு, நிறம் அல்லது மூலப்பொருட்கள் போன்ற பல மாற்றங்களைத் தயாரிப்புகளில் சேர்த்து, அவற்றுக்குரிய சொந்த விலை, SKU, எடை மற்றும் சரக்கு இருப்பை ஒதுக்கலாம்.

சரக்கு இருப்பின் நிலைகள்

தயாரிப்புகளைப் பெறும்போதோ, இடமாற்றப்படும்போதோ அல்லது ஆர்டரை நிறைவேற்றும்போதோ உங்கள் சரக்கு இருப்பின் நிலையைத் தடமறியவும் பகிரவும் சரக்கு இருப்பின் நிலைகளைப் பயன்படுத்தலாம்.

பல்வேறு இடங்களுக்கான நிர்வாகம்

உங்களின் பல்வேறு ஆன்லைன் விற்பனைச் சேனல்கள், கிடங்குகள், சில்லறை விற்பனை ஸ்டோர்கள் அல்லது நீங்கள் ஸ்டாக்கைச் சேமித்து வைக்கும் பிற இடங்களுக்குச் சரக்கு இருப்பை உருவாக்கி ஒதுக்கலாம்.

பார்கோடு லேபிள்கள்

சரக்கு இருப்பைத் தடமறியவும் செக்அவுட்டை விரைவுபடுத்தவும் தயாரிப்புகளுக்கு ஏற்கனவே உள்ள பார்கோடுகளை ஒதுக்கலாம் அல்லது புதியவற்றை உருவாக்கலாம்.

வாடிக்கையாளர்கள்

ஒருமுறை வாங்குபவர்களை வாழ்நாள் முழுவதுமான ரசிகர்களாக மாற்றுங்கள்

வாடிக்கையாளர் சுயவிவரங்களை உருவாக்குதல்

செக்அவுட்டின்போது செய்யப்படும் ஒவ்வொரு ஸ்டோர் அல்லது ஆன்லைன் கொள்முதல் மூலமும் வாடிக்கையாளர் சுயவிவரங்கள் உருவாக்கப்படுகின்றன.

சிறப்பான வாடிக்கையாளர் சுயவிவரங்கள்

தொடர்புத் தகவல், கொள்முதல் வரலாறு, ஒட்டுமொத்தச் செலவு, வாடிக்கையாளர் குறிப்புகள், டேக்குகள், ஷிப்பிங் முகவரி, வரிகள் மற்றும் சந்தைப்படுத்தல் விருப்பத்தேர்வுகள் ஆகியவற்றைக் கண்காணித்துத் தடமறியலாம்.

ஆர்டர் வரலாறு

வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அல்லது ஸ்டோரில் ஷாப்பிங் செய்யும்போது, அவர்களின் ஆர்டர் தகவல் தானாகவே ஒத்திசையும்.

வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளுதல்

மின்னஞ்சல், SMS அல்லது ஃபோன் மூலமாக உங்கள் POS-இலிருந்து வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளலாம்.

வாடிக்கையாளர் தகவல்

பிரத்தியேக நிகழ்வுகள், தள்ளுபடிகள் அல்லது உள்ளடக்கங்கள் மூலம் நீண்டகால உறவுகளை வளர்த்து, உங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்குப் பரிசளிக்கலாம்.

சந்தைப்படுத்தல் விருப்பத்தேர்வுகள்

வரவிருக்கும் விற்பனை அல்லது புதிய தயாரிப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்க, செக்அவுட்டின்போது அவர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் ஃபோன் எண்களைச் சேகரிக்கலாம்.

வாடிக்கையாளர் டேக்குகள்

வாடிக்கையாளர்களுக்கு டேக்குகளை ஒதுக்கி, உங்களின் சென்றடைதல் தேவைகளின் அடிப்படையில் அவற்றைத் தேடி வடிகட்டலாம்.

அறிக்கையிடல் மற்றும் பகுப்பாய்வுகள்

செயல்படக்கூடிய அறிக்கைகளைப் பெறுவதன் மூலம், தகவல் சார்ந்த வணிக முடிவுகளை எடுக்கலாம்

தினசரி விற்பனை அறிக்கைகள் Pro

உங்கள் POS-இலிருந்து உருவாக்கப்படும் தினசரி அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள விற்பனை, தயாரிப்புகள் மற்றும் பணியாளர் செயல்திறன் குறித்த விரிவான நுண்ணறிவுகளுடன் தகவல் சார்ந்த முடிவுகளை எடுக்கலாம்.

டாஷ்போர்டு மேலோட்டம்

ஆன்லைனிலும் ஸ்டோரிலும் உள்ள உங்கள் முழு வணிகத்தின் மேலோட்டத்தையும் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளலாம்.

சில்லறை விற்பனை அறிக்கைகள்*

பணியாளர்கள், இருப்பிடம், காலகட்டம் அல்லது வாடிக்கையாளர்களின் அடிப்படையில் விற்பனையைப் பார்க்கலாம், பகுப்பாய்வு செய்யலாம் மற்றும் ஏற்றுமதி செய்யலாம்.

ரொக்கத்தின் நகர்வைத் தடமறிதல்

நாளின் முடிவில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்காக, உங்கள் பணப் பெட்டியின் இருப்பைத் துல்லியமாகத் தடமறியலாம்.

பணப்புழக்க அறிக்கைகள்*

நேரில் மற்றும் ஆன்லைன் விற்பனையிலிருந்து உங்களுக்கு எவ்வளவு பேமெண்ட் கிடைக்கும் என்பதையும், எப்போது உங்கள் பணம் வந்துசேரும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

தயாரிப்பு அறிக்கைகள்*

நன்கு விற்பனையாகும் தயாரிப்புகள் முதல் விற்பனையாகாத தயாரிப்புகள் வரை, தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த நுண்ணறிவுகளைப் பெறலாம்.

தள்ளுபடி அறிக்கைகள்*

காலப்போக்கில் உங்கள் அணுகுமுறையை மேம்படுத்துவதற்காக, உங்கள் விளம்பரங்களின் செயல்திறனைத் தடமறியலாம்.

சரக்கு இருப்பு அறிக்கைகள்

உங்கள் சரக்கு இருப்பின் மாத இறுதிச் சுருக்கத்தைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் விற்கப்படும் சரக்கு இருப்பின் அளவு மற்றும் சதவீதத்தைத் தடமறியலாம்.

நிதி அறிக்கைகள்

விற்பனை, ரிட்டர்ன்கள், வரிகள், பேமெண்ட்டுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உங்கள் நிதியை மதிப்பாய்வு செய்ய அறிக்கைகளை உருவாக்கலாம்.

வன்பொருள்

Shopify-இன் பிளக்-அண்ட்-பிளே (plug-and-play) வன்பொருள் மூலம் முழுமையான விற்பனைப் புள்ளியை உருவாக்கலாம்

இணைப்புத் திரைகள்

செயலிக்கு உள்ளிருந்தே இணைப்பைக் கண்காணிக்கவும் விரைவாகப் பிழையறிந்து திருத்தவும் Shopify POS உடன் இணக்கமான வன்பொருளை ஒருங்கிணைக்கலாம்.

இணக்கமான வன்பொருள் ஆக்சஸரீகள்

Shopify வன்பொருள் ஸ்டோரில் கிடைக்கும் இணக்கமான வன்பொருள் மூலம் உங்கள் POS-ஐ மேம்படுத்தலாம். பார்கோடு ஸ்கேனர்கள், ரசீது அச்சுப்பொறிகள், பணப் பெட்டிகள் போன்ற ஆக்சஸரீகளை இணைக்கலாம்.

கூடுதல் பேமெண்ட்டுகள்

எந்தவொரு விற்பனையையும் தவறவிடாமல் இருக்க, பிரபலமான கட்டண முறைகளை ஏற்கலாம்

கிஃப்ட் கார்டுகள்

ஆன்லைனிலோ ஸ்டோரிலோ ரிடீம் செய்யக்கூடிய நெகிழ்வான கிஃப்ட் கார்டுகளை விற்கலாம். POS-இலிருந்து நேரடியாக டிஜிட்டல் கார்டுகளை மின்னஞ்சல் செய்து, பேலன்ஸைச் சரிபார்ப்பதற்காக வாங்குபவர்கள் அவற்றை Apple Wallet-இல் சேர்க்க அனுமதிக்கலாம்.

பேமெண்ட்டுகள்/பரிவர்த்தனைகளைப் பிரித்தல்

ஒரே பரிவர்த்தனையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்டண முறைகளை ஏற்கலாம்.

பகுதி பேமெண்ட்டுகள்

டெபாசிட் அல்லது முன்பதிவுத் தொகைகளாக நீங்கள் விரும்பும் அளவில் பேமெண்ட்டுகளைப் பெறலாம்.

தனிப்பயன் கட்டண முறைகள்

காசோலைகள் அல்லது வெளிப்புற டெர்மினல்கள் மூலமாக நடைபெறும் பரிவர்த்தனைகள் போன்ற தனிப்பயன் கட்டண விருப்பங்களை உருவாக்கலாம்.

சந்தைப்படுத்தல்

வாடிக்கையாளர்களை ஆன்லைனிலும் உங்கள் சில்லறை விற்பனை ஸ்டோர்களுக்கும் கொண்டு வரும் சந்தைப்படுத்தல் கருவிகளின் மூலம், உங்கள் பிராண்டின் மீது எப்போதும் கவனத்தை ஈர்க்கலாம்

வாடிக்கையாளர் பிரிவு

கொள்முதல் வரலாறு, இருப்பிடம் அல்லது செலவு செய்யும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின்படி வாங்குபவர்களைக் குழுவாக்கி, விற்பனையை அதிகரிக்கும் பிரத்தியேகச் சலுகைகளுடன் இலக்கிடப்பட்ட சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை உருவாக்கலாம்.

மின்னஞ்சல் சந்தைப்படுத்தல்

செக்அவுட்டின்போது வாடிக்கையாளர் மின்னஞ்சல்களைச் சேகரித்து, சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் தொடர்பில் இருக்கலாம்.

சமூக ஊடக ஒருங்கிணைப்பு

ஸ்டோர் பார்வைகளையும் விற்பனையையும் அதிகரிக்க உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கான பிரச்சாரங்களை உருவாக்கலாம்.

Google Merchant Center

உங்கள் ஸ்டோரை விளம்பரப்படுத்தி, தயாரிப்புகளையும் தகவல்களையும் தானாகவே Google Merchant Center உடன் ஒத்திசைக்கலாம்.
  • * Grow மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களில் அறிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன
  • ** iOS 15.5 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட iPhone Xs அல்லது அதற்குப் பிந்தைய மாடல் தேவை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஈகாமர்ஸ் மட்டுமல்ல. அனைத்து வணிகங்களும்.

Shopify POS சிஸ்டத்தின் மூலம் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் விற்பனையை ஒருங்கிணைக்கலாம்.